July 14, 2008

இருக்கு ஆனா இல்ல..

கொட்டையில்லா திராட்சை
தமாம் பாலா

ஈரமில்லா நெஞ்சங்களும்
நேரமில்லா வாழ்வுகளும்
கனவில்லா தூக்கங்களும்
நினைவில்லா விழிப்புகளும்

உணர்ச்சியில்லா உயிர்களும்
உயிரில்லா உணர்ச்சிகளும்
விருப்பமில்லா அழைப்புகளும்
நெருக்கமில்லா நட்புகளும்

சோகமில்லா இழப்புகளும்
சுகமில்லா அணைப்புகளும்
முத்தமில்லா காதல்களும்
யுத்தமில்லா காயங்களும்

வியர்வையில்லா உழைப்புகளும்
உயர்வுகளில்லா ஊதியங்களும்
பொறுப்பில்லா நுகர்ச்சிகளும்
மறுப்புகளில்லா புகழ்ச்சிகளும்

வண்ணமில்லா ஓவியங்களும்
வாசமில்லா வண்ணமலர்களும்
விருந்தில்லா விழாக்களும்
மருந்தில்லா வியாதிகளும்

கலவியில்லா கர்ப்பங்களும்
கஷ்டமில்லா பிரசவங்களும்
புத்தியில்லா சக்திகளும்
சக்தியில்லா சமூகங்களும்

கொட்டையில்லா திராட்சையும்
கொள்கையில்லா மனிதர்களும்
சங்க கால சரித்திரம் இல்லை
சம கால சாதனையின் எல்லை!

6 comments:

கோவை விஜய் said...

நெஞ்சில் இரமில்லை எனத் தொடங்கி
எதுவெல்லம் இவ்வுலகில் இல்லை என படைத்திருக்கும் கவிதை "சூப்பர்" வாழ்த்துக்கள்.ஆசிரியர் சுப்பையா அவ்ர்களுக்கு கொடுத்த லிங் வழி வந்தேன்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

SP.VR. SUBBIAH said...

/////கொட்டையில்லா திராட்சையும்
கொள்கையில்லா மனிதர்களும்
சங்க கால சரித்திரம் இல்லை
சம கால சாதனையின் எல்லை! ////

கொட்டையில்லா திராட்சையும்
கொள்கையில்லா மனிதர்களும்
பெட்டையில்லா சேவலாக
பெரும்பாடு கொள்வார் என்றும்!

Dammam Bala (தமாம் பாலா) said...

///எதுவெல்லம் இவ்வுலகில் இல்லை என படைத்திருக்கும் கவிதை "சூப்பர்" வாழ்த்துக்கள்-விஜய்///

நம் வகுப்பு அறையின் ஒளி ஓவியரே
உங்களது ஊக்கமூட்டும் பின்னூட்டத்துக்கு நன்றி. அடிக்கடி நம்ப வீட்டுப்பக்கம் வாங்க!

ஆங்கில பதிவும் இருக்கு. அதில் டோஸ்மாஸ்டர் பத்தி படிங்க. நீங்க மற்றும் விமல் தம்பி போன்ற இளைஞர்களுக்கு அது மிகவும் பயன் தரும் அமைப்பு ஆகும்.

வாழ்க வளமுடன்!

Dammam Bala (தமாம் பாலா) said...

அன்பு வாத்தியாரே..
பதிவுக்கு வந்ததற்கும்,பதில் கவிதை தந்ததற்கும் பல கோடி நன்றிகள்.
உங்கள் ஊக்கம் எங்கள் து(டு)டிப்பு!

ராமலக்ஷ்மி said...

//"இருக்கு ஆனா இல்ல.."//

அப்படிப் பட்ட இருப்பு இருந்தும் இல்லாதது போலத்தான். இல்லையா பாலா? அதுவும் இந்தக் கடைசி வரிகள்:
//கொட்டையில்லா திராட்சையும்
கொள்கையில்லா மனிதர்களும்
சங்க கால சரித்திரம் இல்லை
சம கால சாதனையின் எல்லை!//
வெகு அருமை.

துளசி தளம் வழியாக வந்தேன்.

Dammam Bala (தமாம் பாலா) said...

பன்னி(கன்னடம்!).. ராமலக்ஷ்மி அவரே.. சென்னாகிதிரா?!! :))

உங்கள் வரவு நல்வரவாகுக!!!!!

நானு..நிம்ம முத்துசரத்துக்கு பந்து ரிப்ளை மாடுத்தினி!!