July 20, 2008

கூழ் அடுக்கு

கூழ் அடுக்கு
(by தமாம் பாலா)

ஆ.. அதுதான் அவன் பெயர்.

இரவு, 12 மணி. அமாவாசை நிலவு, பளிச்சென்று துடைத்து வைத்தது போல பச்சை நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இன்னும் 20 செகண்டுகளில் சிகப்பு நிறம் வந்துவிடும்.

அதற்குள் வீட்டுக்குள் சென்று விடவேண்டும். தினம் என்ன பொழப்புடா சாமி(?!), 5000 கீமீ ஷட்டில் பயணம், என அலுத்துக்கொண்டு தனது 1025 மாடி கட்டிடத்தில் நுழைந்தான்.

நியூக்ளியர் பவர் எலிவேட்டர் வழுக்கி, 526ம் மாடியில் நின்றது. வெளியே வந்தான், தன் அப்பார்ட்மெண்ட் முன்பு நின்றான். கதவின் முன் நின்று சன்னமாக.. ஆ..ஆ..ஆ.. என்று சொல்ல, கதவின் ப்ளாஸ்மா டிஸ்ப்ளேயில்.. ரால்(RAL) 1001,1002.. என்று ஓடி ரால் 3014ல் நின்று.. கதவு..திறந்தது!

சொல்ல மறந்து விட்டேனே.. ஆ..வின் முழு பெயர்.. ஆத்மா!
நூறு தலைமுறைக்கு முன் ஆத்மராம ஆதிநாராயண ராமகிருஷ்ணன் என்ற பெயரை.. நாளாக,நாளாக பெயர் குறைப்பு செய்து.. கிபி 5035ல், இன்று.. ஆ.. என்று சுருக்கிவிட்டது உலக அரசாங்கம்!

ஆ..விலே எந்த ஆ..? என்ற பெயர் குழப்பம் வரக்கூடாதென.. ரால் கலர் !!!


********

வீட்டுக்குள்ளே.. வீடு என்ன.. இருப்பதே.. ஒரே அறைதானே..
ஜெபம் செய்வது போல விரல் நுனியை தொட்டால், ஹால்,பெட்ரூம்,கிச்சன் அல்லது பாத்ரூமாகி விடுகிறது...

உள்ளே.. ஜைரோஸ்கோபிக் நாற்காலியில்.. நி.. (நித்யா!! :))
ஓ.. இப்போது ஹால் மோடில் வைத்திருக்கிறாள்.

பின்னால் திரும்பாமலேயே, வந்துடுங்க.. ஆ.. என்றாள்.
அவள் கைகள் டைனிங் டேபிள் கம் மானிடரில்..

என்ன இது.. டேபிளின் திரையில்.. பச்சை நிறமாக..??
மெலிதான மாங்காயின் புளிப்பு வாசனை.. காற்றில்..மூக்கில்..

நி.. ட்ராயரிலிருந்த ஸெலுலோஸ் கவரை எடுத்து கிழித்தாள்..
அதை எடுத்து மெல்ல.. கடிக்க ஆரம்பித்தாள். கிழித்து போட்ட கவரில்.. சிந்தடிக் மேங்கோ பைட்.. நேச்சுரல் மேங்கோ ப்ளேவர்!!

ஆ.. கண்கள், மின்ன, அவளை.. பின்னாலிருந்து.. அணைத்துக் கொண்டான். அடி..க..சொ..இ..?? (அடி கள்ளி, சொல்லவே இல்லையே !!!) அவர்கள் பேசிக்கொள்வதே எண்ணி, சில வார்த்தைகள் தான்.
எனர்ஜி லெவெல் குறையக்கூடாதென, உ.அ வில் (உலக அரசில்) பேச்சுக்கு ரேஷன்!! என்றாவது உணர்ச்சி வசப்பட்டு.. சில டெசிபல் மீறி விட்டால்.. அவ்வளவு தான்! ஒரு வாரம் மௌன தண்டனை.. வீட்டின் சுவர்களுக்கெல்லாம், கண்..காது..மூக்கு!!!!!!!

உலகம் தனி,தனி நாடாக இருந்தபோது.. இந்தியா என்ற தேசத்தில், டாக் ரேஷனை ஒருவர் கண்டுபிடித்தாராம்.. அவர் பெயர் கூட.. ஏதோ.. ம..ர.. என்று வருமே.. (ஓ.. மணி ரத்னம் ?!!!)

நி.. முகத்தில், தோன்றிய சந்தோஷம், திரையில் மறைந்த மாங்காவோடு, மங்கி.. இருண்டது.. “ஆ.. சொல்லு.. இந்த முறை ஓகே ஆகிவிடும் தானே.. அவள் குரல் கம்மி, கண்ணில் நீர் !!

“ஆண்டவன் அருளால் எல்லாம்”.. ஆ.. முடிக்கும் முன்.. நி.. அவன் வாயை பொத்தினாள். ஆ, உ.அ.வின் கட்டளையை மீற நினைக்காதே! கடவுள் என்பது பொய் என்று 3000 வருடம் முன்னேயே ப்ரூவ் ஆகிவிட்டதல்லவா?? நல்லவேளை நீ சொன்னது.. 10 டெசிபலை தாண்டவில்லை.. பிழைத்தாய்... அவனை.. இறுக அணைத்தாள்!
விரல் நுனி.. அறையின் மேசை மறைந்து.. அந்த இடத்தில்.. படுக்கை!

********

நி..நி..நி.. டாக்டர் அறையிலிருந்து.. குரல் கேட்டது. நித்யா உள்ளே சென்றாள். டாக்டர் ரூம், ஒரு மினி ஸ்பேஸ் ஸ்டேஷன் போல, ஒரு குட்டி லாபரெட்ரி போல.. சீக்கிரம், வந்து உட்காரு.. 21ம் நூற்றாண்டு மாதிரி எனக்கென்ன உதவிக்கு நர்ஸா இருக்கா? இன்னும் 425 பேஷண்ட் பார்க்கணும்.. அலுத்துக்கொண்டாள்.. அந்த பெண் டா..!!

என்ன.. மறுபடியும்.. ஸ்கேனா?? உங்களையெல்லாம் திருத்தவே முடியாது.. என்ற படி ஹோலோகிராபிக் ஸ்கேனரை இயக்கினாள், டா..

திரையில்..

குழந்தை..
ஆண் குழந்தை..
எடை 500 கிராம்
மூளை 46 கிராம்
இஞ்சினியரிங் அறிவு 60%,
கவிதை 5%,
காமம் 24%
பாஸ்கெட் பால் கைகள்,
ப்யானோ விரல்கள்..
...
....
என்று.. பல ஆயிரம்..வரிகள்..

ஓடி.. ஓடி..
மெல்ல..
இறுதியில்..
ஒரு வரி..
சிகப்பு நிறத்தில்..
...கூழ்.. அடுக்கு !!!!
அபாயம்.. அனுமதி மறுக்கப்படுகிறது!!!!!!!!!!!!!!!!!

டா.. மீட்டியோர் தாக்கியது போல்.. அதிர்ந்தாள், கொதித்தாள். அவள் முகத்தில் சினேக பாவம் மறைந்து, ஒரு முறைப்பும்.. விறைப்பும்..

உங்களுக்கெல்லாம் எத்தன வாட்டி சொன்னாலும் புரியாதா??
ஒரு காலத்துல,உக்காந்து சாப்பிட்டீங்க..
சமுதாய,சமூக பொதுநீதி அடிப்படையிலே.. வேலையிலே ஒதுக்கினோம்.. பிறகு கல்லூரியிலே.. +2 விலே.. பிறகு 1000 வருஷம் போராடி.. எல் கேஜி வரை வடிகட்டினோம்.. இத்தனை வருஷம் முயற்சியிலே இப்போதான், வயித்து புள்ளை அளவுக்கு.. முன்னேறியிருக்கோம்..

வேண்டாம், எச்சரிக்கைன்னு சொன்னா .. மறுபடியும்.. அதே தப்பு..

நி.. சட்டென்று.. டா.. வின் காலில் விழுந்தாள்.. உங்களை என் தெய்வமா.. நினைக்கிறேன்.. இந்த ஒரு தடவை மட்டும்..

தப்பு மேல தப்பு பண்ணாதே.. நீ சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கே..உன்ன நேரா அஸைலமுக்கு அனுப்பலாம்.. ஆனாலும் என்னைப் போல பெண்ணாச்சேன்னு பாக்கறேன்..

அப்ப.. என் கொழந்த...???
அது எல்லாம் கூழ்.. அடுக்கு ன்னு வந்த போதே.. ஆடோமெடிக்கா.. ந்யூக்ளியர் டெஸ்ட்ராயர் மூலம் க்ளீன் பண்ணியாச்சு.. நீ.. போகலாம்..!!!!

நித்யா.. மெதுவாக ஹாஸ்பிடலின் காரிடாரில் நடந்தாள். வயிறு கொஞ்சம்.. லேசானது போல, மனசு கனமானது போல.. ஒரே குழப்பமான.. ஒரு.. அமைதி.. மயான அமைதியோ?!???

எலிவேட்டரில்.. போகும் போது, நி.. எதோ அசந்தர்ப்பமாக.. உணர்த்தாள்.. வயிற்றில் ஏதோ சங்கடம்.. ஒரு மெல்லிய பூவால் வருடுவது போல.. கொஞ்சம் கிச்சு, கிச்சு போல..

5 டெசிபலில்..
மிக,மிக மென்மையாக...
களுக்கென்று.. சிரித்தபடி..
அவள் வயிற்றுக்குள்..
‘சக்’ என்று உதைத்தான்...
ஆ..!!!!
(ஆத்மா இல்லை.... ஆண்டவன்!!!!!!!!!! :))))))))))

******

23 comments:

none said...

அசத்திட்டீங்க பாலா.. சின்னதா பயம் வேற காட்டுறீங்க.

Subbiah Veerappan said...

நன்றாக உள்ளது! பரிசுபெற வாழ்த்துக்கள்!

1
//////கடவுள் என்பது பொய் என்று 3000 வருடம் முன்னேயே ப்ரூவ்
ஆகிவிட்டதல்லவா?? நல்லவேளை நீ சொன்னது..////
2.
////‘சக்’ என்று உதைத்தான்...
ஆ..!!!!
(ஆத்மா இல்லை.... ஆண்டவன்!!!!!!!!!! :))))))))))/////

ப்ரூவ் பண்ணும்போது அந்த ஆண்டவன் எங்கே போய்த் தொலைந்தான் ஸ்வாமி?:-))))))))))

M.Rishan Shareef said...

ஆஹா..சூப்பர் பாலா :)
போட்டிக்கான கதையென நினைக்கிறேன்..
வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே :)

துளசி கோபால் said...

அட்டகாசம் பாலா.

வாழ்த்து(க்)கள்.

அம்மாவாசை நிலவுன்னதும் இது 'ஏமி கொடவ' ன்னு இருந்துச்சு.

இன்னும் 3000 வருசமானாலும் நாம் வச்சுக்கற பெயர்கள் மட்டும் மாறாது போல:-)))))

கட்டக் கடைசியா ஒரே ஒரு சந்தேகம்.

ரெண்டு பேர் இருக்கும் வீட்டில் வெவ்வேற அறைக்கான தேவைன்னு ரெண்டுபேரும் அவுங்கவுங்க விரல் நுனியைத் தொட்டா என்ன ஆகும்?

ச்சும்மா...:-))))))

ஆமாம். இந்தக் 'கூழ்' குடிக்க ஏதுவானதா?


ஆனாலும், கற்பனை அழகா வந்துருக்கு பாலா.

துளசி கோபால் said...

கமெண்ட் மாடரேஷன் போட்டுக்கலையா?

இரா. வசந்த குமார். said...

பாலா சார்... நன்றாக இருக்கின்றது. இந்த ஆ - நி மாற்றுங்களேன். அவர்கள் அவருக்கு மட்டுமே சொந்தமானவர்கள்.

vimal said...

கதை அருமை, பரிசு பெற வாழ்த்துகிறேன்.

யோசிப்பவர் said...

நன்றாயிருக்கிறது.

வெண்பூ said...

வாவ்.. நல்ல கதை பாலா.. வாழ்த்துக்கள்.

Dammam Bala (தமாம் பாலா) said...

///கல்கிதாசன் said...
அசத்திட்டீங்க பாலா.. சின்னதா பயம் வேற காட்டுறீங்க.///

கல்கியாரே வகுப்பு அறையிலே நான் பின்னூட்ட ஸ்லைடு போட்ட உடனே வந்த முதல் போணி நீங்க தான் :))

உங்க ஊக்கமூட்டும் பின்னுட்டத்துக்கு நன்றி! (தாத்தா பதிவுல போட்ட ஸ்மைலிக்கும் சேர்த்து தான் !!)

Dammam Bala (தமாம் பாலா) said...

///SP.VR. SUBBIAH said...
நன்றாக உள்ளது! பரிசுபெற வாழ்த்துக்கள்!///

குருநாதரே, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்!!! வேறன்ன வேண்டும் எனக்கு?!!! நீங்க தானே சொன்னீங்க, participation is important in a competition அப்படின்னு..

//////கடவுள் என்பது பொய் என்று 3000 வருடம் முன்னேயே ப்ரூவ்
ஆகிவிட்டதல்லவா?? நல்லவேளை நீ சொன்னது..////
\\\\\ப்ரூவ் பண்ணும்போது அந்த ஆண்டவன் எங்கே போய்த் தொலைந்தான் ஸ்வாமி?:-)))))))))\\\\\
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா.. உன்னை மறையோதும் ஞானிகள் மட்டுமே காண்பார்!!!
-நான் சொன்னதில்லே, மூதறிஞர் ராஜாஜி சொன்னது :)))

Dammam Bala (தமாம் பாலா) said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆஹா..சூப்பர் பாலா :)
போட்டிக்கான கதையென நினைக்கிறேன்..
வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே :)///

அன்பு கவிஞரே, நீங்க எழுதுற கவிதைகளுக்கு முன்னால் இதெல்லாம் சும்மா.. ஜுஜுபி :))

உங்களுக்கு பிடித்தால் எனக்கும் சந்தோஷம் தான்!

Dammam Bala (தமாம் பாலா) said...

/// துளசி கோபால் said...
அட்டகாசம் பாலா.

வாழ்த்து(க்)கள்.////

ராதிகா, நம்ம வீட்டுக்கு இன்னிக்கு என்னிக்குமே வராத vip எல்லாம் வந்திருக்காங்க.. கொஞ்சம் பாதாம் கீர் ரெடிபண்ணுமா! வாங்க ஹிஸ்ட்ரி ஜாகரஃபி ப்ரோஃபஸர்.. உங்கள் வரவு நல்வரவாகுக!

///அம்மாவாசை நிலவுன்னதும் இது 'ஏமி கொடவ' ன்னு இருந்துச்சு.///

அது சும்மா ஒரு பில்ட்அப்புக்கு :))

///இன்னும் 3000 வருசமானாலும் நாம் வச்சுக்கற பெயர்கள் மட்டும் மாறாது போல:-)))))///

ஓ.. இதுதான், ஊரைச்சொன்னாலும் பேரைச்சொல்லாதேங்கறதா?? :))))

///கட்டக் கடைசியா ஒரே ஒரு சந்தேகம்.

ரெண்டு பேர் இருக்கும் வீட்டில் வெவ்வேற அறைக்கான தேவைன்னு ரெண்டுபேரும் அவுங்கவுங்க விரல் நுனியைத் தொட்டா என்ன ஆகும்?

ச்சும்மா...:-))))))////

கூழ் அடுக்கு-பார்ட் 2... நி.. ப்ரீசர்- ஐ ஓவன் மோடுக்கு மாற்றிக் கொண்டிருக்கையில்.. ஆ. விரல்நுனி ஜெபம் செய்ய.. அங்கே படுக்கை!!!
சும்மா இருங்க ஆ. சமையல் முடியற வரைக்கும் என் ராசா..:-))/////

///ஆமாம். இந்தக் 'கூழ்' குடிக்க ஏதுவானதா?////
கண்டிப்பாக! நீங்க தான் உங்க வரவாலே அதுல இனிப்பு சேர்த்து பாயசமாவே மாத்திட்டீங்களே!! :)))

///ஆனாலும், கற்பனை அழகா வந்துருக்கு பாலா.///
நம்பளையும் மீறி, சில தப்புகள் நடக்கறது தானே, வாழ்க்கை !!
தினம் தினம் செஞ்சுரி அடிக்கிற உங்கள போன்றவங்க பாராட்டுக்கு வேல்யூ அதிகம் தான் :-))

(தாதாக்கள் பாஷையிலே 'செஞ்சுரி'க்கும் வேறே அர்த்தம் இருக்கா???!!!)

Dammam Bala (தமாம் பாலா) said...

/// துளசி கோபால் said...
கமெண்ட் மாடரேஷன் போட்டுக்கலையா?///

இப்போதான் பின்னூட்ட காய்ன் ஃபோன் பூத்துல கொஞ்சம் சில்லறை விழுது..செல்லா காசு விழும் போது பூட்டிக்கலாம்னு இருக்கேன் :))

Dammam Bala (தமாம் பாலா) said...

///இரா. வசந்த குமார். said...
பாலா சார்... நன்றாக இருக்கின்றது. இந்த ஆ - நி மாற்றுங்களேன். அவர்கள் அவருக்கு மட்டுமே சொந்தமானவர்கள்.///

அன்பு வசந்த், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி!

(சுப்பையா)வாத்தியாருக்கு ஒரு கவியரசர் மாதிரி எனக்கு 'அரங்க ராசர்'.. அறிவியல் தமிழை படிக்கவும் எழுதவும் கற்று கொடுத்த ஆசான் அல்லவா, அவர்?!!!

இனி நீங்கள் குறிப்பிட்ட விஷயம்..
(கௌரவம் சின்ன சிவாஜி குரலில்)
'பேர மாத்தணுன்னு தான் எனக்கும் தோணறது, ஆனா..எப்படி மாத்தறதுன்னு தெரியலையேப்பா!!!

Dammam Bala (தமாம் பாலா) said...

/// கோவை விமல்(vimal) said...
கதை அருமை, பரிசு பெற வாழ்த்துகிறேன்.///

நன்றி, விமல் தம்பி!! தம்பியுடையான் இந்த தமாம் பாலா படைக்கு அஞ்சான்!!! :-)))

Dammam Bala (தமாம் பாலா) said...

///யோசிப்பவர் said...
நன்றாயிருக்கிறது.///

பின்னூட்டத்துக்கு நன்றி, யோசிப்பவரே! அமாவசை நிலவின் பச்சை ஒளியில் உங்கள் புகைப்படமும் நன்றாயிருக்கிறது!! :))))

Dammam Bala (தமாம் பாலா) said...

///வெண்பூ said...
வாவ்.. நல்ல கதை பாலா.. வாழ்த்துக்கள்.////

நன்றி,வெண்பூ!!!
வெண் பூ, ஆண்பூவா பெண் பூவா என்று யோசிப்பவர் பலர்..
'ரொம்ப நல்லவன்' என்று தெரிந்து கொண்டவர் சிலர்!! :)))))

PPattian said...

எனக்கு இது சுத்தமா புரியலை. கூழ் அடுக்குன்னா என்ன?

Dammam Bala (தமாம் பாலா) said...

/// PPattian : புபட்டியன் said...
எனக்கு இது சுத்தமா புரியலை. கூழ் அடுக்குன்னா என்ன?///

கூழ் அடுக்குன்னா.. CREAMY.. LAYER.. :))

ஆஹா.. போட்டு வாங்கிட்டீங்களே.. புபட்டியன் !!!!!

PPattian said...

//ஆஹா.. போட்டு வாங்கிட்டீங்களே.. புபட்டியன் !!!!!//

:))))))

Sridhar Narayanan said...

//கூழ் அடுக்குன்னா.. CREAMY.. LAYER.. :))//

இதைப் படிக்கிற வரைக்கும் எனக்கும் கூட புரியல. :-))

Dammam Bala (தமாம் பாலா) said...

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி, ஸ்ரீதர்!