November 19, 2017

கடவுளின் அழைப்பு

கடவுளின் அழைப்பு
(தமாம் பாலா)

காலையில் மெல்ல கண்விழித்து
கடந்த இரவுவேளை நான் விட்ட
இடத்திலிருந்து தொடர்ந்தேன்
படமாய் படைக்கும் என் உலகை

கைபேசி சிணுங்கவும் இங்கே
கடவுள் (ஐ) படைத்த மனிதன்
அங்கே யாரோ என்ற எனக்கு
அதிசயக்குரல் நான்தான் உன்

கடவுள் பேசுகிறேன் நீ படைக்கும்
கனவு உலகில் எனக்கும் உண்டா
ஒரு இடம் என்றே கேட்டது குரலும்
ஒரு நிமிடம் யோசித்தேன் எதற்கு

கடவுளிடம் வம்பு என்று நினைத்து
ஐயா நான் இருக்கும் காலம் வரை
என்னோடு நீரும் இருப்பீர் என்றும்
எனது அறை தானே உமது அறை?

அப்பாடா, என்னை நீ முந்திடுவாய்
இப்புவி விளையாட்டில் என்ற பயம்
இனி எனக்கு இல்லை, நன்றி நன்றி
இப்படி சொல்லி அழைப்பு முடிந்தது!

நான் யார்?

நான் யார்?
(தமாம் பாலா)

பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழன்
வேலிக்கும் சாட்சி
சொல்லும் ஓணான்

மூன்றுகால் முயல்
பிடித்த முரட்டு உடும்பு
நேரம் பார்த்து பலபல
நிறம் மாறும் பச்சோந்தி

பசுத்தோல் போர்த்திய
பதுங்கிப் பாயும்புலி
எதுவுமே நானில்லை
என்றால் நான் யார் ?