April 20, 2008

டோஸ்ட் மாஸ்டர்ஸ் டிவிஷன் F மாநாடு

டோஸ்ட் மாஸ்டர்ஸ் டிவிஷன் F மாநாடு (17,18 ஏப்ரல், அல்கோபார் சவுதி அரேபியா)
பாலசுப்ரமணியன்

கடந்த வார இறுதியில் (ஏப்ரல் 17,18 தேதிகளில்) அல்கோபார் லீமெரிடியன் நட்சத்திர விடுதியில் “டோஸ்ட் மாஸ்டர்ஸ் டிவிஷன் F மாநாடு(Toastmasters Div F Conference) வெகு சிறப்பாக நடந்தேறியது.

சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்திய, பாகிஸ்தான், பிலிபைன்ஸ், வங்காளதேசம், இலங்கை மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 700-800 ஆங்கில பேச்சாளர்கள் (Toastmasters) கலந்து கொண்ட, ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவில் கல்வியாளர்களும், ஆளுமை முன்னேற்ற தன்னார்வலர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

டோஸ்ட்மாஸ்டர் 2004 வருடத்திற்கான உலகத்தின் சிறந்த பேச்சாளர் திரு.ராண்டி ஹார்வேயும், 2007 வருடத்திற்கான உலகத்தின் சிறந்த பேச்சாளர் விகாஸ் ஜிங்கரனும் (அமெரிக்காவில் முதுவர் பட்டம் படிக்கும் இந்திய இளைஞர்!) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தங்களது பேச்சு திறமையின் இரகசியங்களை அவையோரோடு பகிர்ந்து கொண்டனர்.

தமாம், கோபார், ஜுபைல் டோஸ்ட்மாஸ்டர்களில் 5 ஏரியாக்களின் வெற்றி வீரர்கள் (ஒவ்வொரு ஏரியாவும் 5 முதல் 7 கிளப்களை உள்ளடக்கியது) டிவிஷன் அளவு போட்டியில் பன்னாட்டு
பேச்சு பிரிவு, நகைச்சுவை பேச்சு பிரிவு, விமர்சன பேச்சு பிரிவு மற்றும் உடனடி பேச்சு பிரிவு ஆகியவற்றில் பங்கு பெற்றனர்.

இந்த விழாவை திறம்பட, சீரும் சிறப்புமாக, வெற்றி விழாவாக அமைய உழைத்த விழா குழுவினரை வழி நடத்தியவர் ஜுபைலை சேர்ந்த டோஸ்ட்மாஸ்டர் திரு.ஷாகுல் ஹமீது என்பது குறிப்பிடத்தக்கது.


தமாமிலிருந்து
பாலசுப்ரமணியன்

பின்குறிப்பு : இந்த கட்டுரையின் ஆசிரியர் ஸமில் டோஸ்ட்மாஸ்டர் கிளப்பின் தலைவர். மேலே குறிப்பிட்டுள்ள டிவிஷன் போட்டியில், உடனடி பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களில் ஒருவர்.
டோஸ்ட்மாஸ்டர் பற்றி மேலும் விவரங்களுக்கு www.toastmasters.org