June 27, 2008

யாதும் ஊரே யாவரும் கேளிர்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்றார் கணியன் பூங்குன்றனார்.

சொந்ததில்,நெருங்கிய உறவுகளில்-அம்மா-மகள், அப்பா-மகன்,கணவன்-மனைவி,உடன்பிறப்புகள் இடையே கூட சண்டையும்,சச்சரவும் நிரம்பிய காலம் இது. சகிப்புத்தன்மை என்பது காணவும் அரிதான ஒன்றாகி விட்டது.

அதே சமயத்தில், பிறப்பால் குடியால் வேறுபட்ட நண்பர்களிடையே ஒற்றுமையையும், ஒத்த சிந்தனையையும், ஒருங்கிணைவையும், ஒரே அலைவரிசையில் அமைந்த சிந்தனையையும் காண முடிவது இயற்கையின் விந்தையல்லவா?

இந்தியாவின் வணிக தலைநகராம் மும்பையில் வடநாட்டான்/தென்னாட்டான் பேச்சு அடிபடுகிறது. நம் நாட்டுக்கு நாலாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் தொழில் நிமித்தம் வசிக்கும் என் போன்ற தமிழர்களுக்கு, இன்னோரு தமிழ் குரல் கேட்க கிடைப்பதே சொர்க்கம்.. இது பற்றி, நான் எழுதி கீற்று.காமில் வெளிவந்த ஒரு கவிதை உங்கள் வாசிப்புக்கு, இதோ..நண்பர்களே..

மனிதத் துணை
பாலசுப்ரமணியன்

கடல்கடந்து வந்த இடத்திலும்
கண்ணுக்கு எட்டிய தூரத்திலும்
மனிதத் துணையில்லாத நேரம்
மனம் விட்டு பேசி, பழகிடவும்

எந்த நாட்டவன் கிடைத்தாலும்
எனக்கு மகிழ்ச்சிதான்,அதிலும்
சொந்த நாட்டானாக இருக்கவும்
சொர்க்கம் கண்ணில் தெரியும்

தென்னிந்தியனாய் அமைந்திட
தெளிவு பிறக்கும் பிறரைவிட
தமிழனாக நண்பன் கிடைத்திட
தடையிலா இன்பம் அளித்திட

தப்பித்தவறி அந்த நண்பன்
தஞ்சாவூர்காரனாகவும்,ஏன்
தெற்குவீதியை சேர்ந்தவன்
தூரத்து உறவு,சொந்தக்காரன்

என்று பலவிதமான நட்புகள்
இன்று பாலையின் நடப்புகள்
என்ன ஒரே குறை, உறவுகள்
எதுவும் உடன்பிறந்த தம்பிகள்

போல ஒருபோதும் வராது,அது
பாகப் பிரிவினை, பஞ்சாயத்து
பெற்ற தாய்க்கும் செலவழித்து
செய்த செலவை பங்குபிரித்து!

6 comments:

Subbiah Veerappan said...

நன்றாக உள்ளது!தமிழ்மணத்தில் தொடுப்புக் கொடுங்கள்!

முன்பு ஒருமுரை நான் எழுதியது நினைவிற்கு வருகிறது:

அசையாத சொத்துக்களில்
அம்மாவை வைத்துக் கொள்ள
மாதங்களைப் பங்குவைத்தார்கள்!

Anonymous said...

///SP.VR. SUBBIAH said...
நன்றாக உள்ளது!தமிழ்மணத்தில் தொடுப்புக் கொடுங்கள்!///

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, ஆசான் அவர்களே..

தங்கள் அறிவுரைப்படி, அனைவருக்கும் பயனுள்ள விஷயங்களை எழுத முயற்சிக்கிறேன்!

sury siva said...

//தப்பித்தவறி அந்த நண்பன்
தஞ்சாவூர்காரனாகவும்,ஏன்
தெற்குவீதியை சேர்ந்தவன்
தூரத்து உறவு,சொந்தக்காரன்//


இன்னொரு தஞ்சாவூர்க்காரர் வலையுலகத்திலா ?
வலையுலகம் தாங்குமா ?

தஞ்சையவர் எங்கிருந்தாலும்
தன்மையாக இருப்பவர்.
தனக்கு என்று வைத்த எதையும்
தானமென தருபவர்.

கல்வி கேள்வி எதிலுமே
காணா மாட்சி கொண்டவர்.
வானம் வறண்ட போதிலும் இவர்
கானம் பாட வல்லவர்.

இதோ நான் ஒரு தஞ்சை வாசி.
மனதிலே நஞ்சை நிலம்.
நாலு வித பயிர்கள்.
ஒன்று ஆன்மீகம், தமிழும் வடமொழியும்
இன்னொன்று இசை
இன்னும் ஒன்று பண் மற்றது மண்
ஆம். தமிழ் மண் மட்டும் மரபு பற்றி
பார்த்தது கேட்டது ரசித்தது எல்லாம் சொல்ல‌
இன்னொரு வயல் வெளி.

வாருங்கள்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

Dammam Bala (தமாம் பாலா) said...

அன்பு சூரி ஐயா,

தங்களது பின்னூட்டத்துக்கு நன்றி.

நீங்கள் குறிப்பிட்ட அந்த 'கோளாறுகளின்" ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்னிடமும் 'இலைமறை காய்" போல தென்படுகிறன. காவிரி தண்ணீரின் பாதிப்பு தான் அது என்று உங்களது விவரிப்பிலிருந்து தெரிகிறது. உங்கள் பதிவுகளை லேசாக எட்டிப்பார்த்து,பிறகு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன் :-)

தாத்தாவும்,பிச்சையும் நலம்தானே?

(எங்க தாத்தாவை பற்றி தெரிந்து கொள்ள எனது latest பதிவுக்கு வாங்க :-))

none said...

:-))))))

Vallidevi said...

HI, how are you all? weekend......... of course a long week end. so got the time to search your blog after so many months.The only relationship in this world without expectation is Friendship. still i believe in that as i Got you and Radhika in that list. Vallidevi