March 16, 2008

சொல்லும்.. செயலும்..

(பாலசுப்ரமணியன்)

அம்மா சொல்ல நினைத்தாள்.. சொன்னாள்..
கண்ணா.. நீ இன்று சின்னப்பையன்..உனக்கு
பொம்மை வாங்கித் தருவேன்..நீ வளர..வளர..
விண்ணைத் தொடும் கல்வி தருவேன்.. உனக்கு

தின்ன தினம் அறுசுவை உணவு தருவேன்
இன்னும் பல செல்வம் தருவேன்.. உனக்கு
பொன் நிகர் பெண்ணை மணமுடித்து வைப்பேன்
அன்று சொல்லிய வண்ணம் செய்து காட்டினாள்.

கண்ணன் அன்று சொன்னான்..
அம்மா நான் அன்பைத் தருவேன்..உனக்கு
வீடு தருவேன்.. வாகனம் தருவேன்..
அவையில் பெருமை தருவேன்..உனக்கு

மகிழ்ச்சி தருவேன்.. மரியாதை தருவேன்..
கண்ணன் சொல்லிய வண்ணம் செய்தான்
கண்ணன் சொல்லாதது என்ன?
இது எல்லாம் என்..திருமணத்திற்கு முன்

என்..திருமணத்திற்கு பின்..நான்..
உனக்கு பிடித்த "முதியோர் இல்லத்தில்"
பொறுப்பாய் இடம் வாங்கித் தருவேன்..
கண்ணன்.. சொல்லவில்லை.. ஆனால்

செய்து காட்டினான்.. நம்மால் சொல்ல முடிவதை
செய்ய முடிந்தாலும்.. செய்ய முடிவதை..
சொல்ல முடிவதில்லை.. எதையும்
செய்வதற்குகூச்சம் இல்லை.. சொல்வதற்குத்தான்!

(நன்றி, கீற்று.காம்)

2 comments:

Anonymous said...

கூட்டுக்குடும்பங்களின் சொர்க்கம் நேற்றைய இந்தியா. அப்படிப்பட்ட நாட்டில் இன்று முதியோர் இல்லங்கள் நுழைவது, பொருளாதாரம் சார்ந்த புதுயுகத்துக்கு நாம் தரும் விலையாகவே தோன்றுகிறது..

cheena (சீனா) said...

என்ன செய்வது - காலம் மாறுகிறது பாலா - நடைமுறைச் சிக்கல்கள் கூட்டுக் குடும்பங்களை உடைக்கின்றன - சிறந்த வழி - முதியோர்களை முதியோர் இல்லம் அனுப்புவதற்கு முன் அவர்களைத் தயார் செய்ய வேண்டும் மன ரீதியில் - இல்லை எனில் பிரச்னை தான்.

பாலா - யாரும் விரும்பி பெற்றோரை இல்லங்களுக்கு அனுப்புவதில்லை