March 14, 2008

தகப்பனானதினால்...

(கற்பனை பாரதி)


நான் கண்விழித்து படித்த போது
நீ கூட விழித்ததற்க்கு நினைத்து கொண்டேன்..
சிறு வயதில் சரியாக படித்ததில்லையென்று !!
நான் கிரிக்கெட்டில் கோப்பை வாங்கியவுடன்
நீ தெண்டுல்கர் என்பதை போல் பெருமை
பேசியவுடன் நினைத்து கொண்டேன்....
நீ விளையாடியதேயில்லையென்று !!
நான் பள்ளியில் முதல் மாணவனானபோது
நீ ஊரெல்லாம் சொல்லிய போது
நினைத்து கொண்டேன்...நீ பதக்கமே வாங்கியதில்லையென்று !!
நான் சிறு பிணியில் விழுந்தாலும்
நீ துரும்பாக இளைத்தாயே நினைத்து கொண்டேன்....
உனக்கு பயம் ஜாஸ்தியென்று !!
நான் கடவுசீட்டுக்காக காவல் நிலையம்
சென்ற போது நீ வக்கீல் நண்பனுடன்
வந்து நின்றாயே நினைத்து கொண்டேன்....
உனக்கு பதற்றம் அதிகமென்று !!
நான் சிறிய வேலை சேர்ந்தவுடன்
நீ ஆட்சி தலைவராய் நினைத்த போது
நினைத்து கொண்டேன்....நீ தொழிலாளி
என்பதாலென்று என் திருமணம் நடக்க ,
நீ பிறர் காலை பிடித்தவுடன்
நினைத்து கொண்டேன்....
உனக்கு தைரியம் குறைவென்று
என் குழந்தை பிறந்தவுடன்....
எனை பார்த்து சிரித்தவுடன்
உண்மை தெரிந்ததப்பா!!
உன் பெருமை புரிந்ததப்பா!!
தகப்பனானதினால்
தன்னையே தந்தாயென்று!!!

3 comments:

Unknown said...

I could see lot of reality in your poems. Ofcourse , everyone feels it , but you wrote it. Its great...

தியாகராஜன் said...

உணர்வுகளை வடித்திருக்கும் பாங்கு அற்புதம்.
பதித்திருக்கும் வார்த்தைகள் எமக்காகவும் தான்.
அன்புடன்
தியாகராஜன்.

cheena (சீனா) said...

உணர்ச்சிகள் எண்ணங்கள் எழுத்து வடிவில் அருமை அருமை